கல்வெட்டான்குழியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


கல்வெட்டான்குழியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x

அம்பை அருகே கல்வெட்டான்குழியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அருகில் உள்ள முடப்பாலம் பகுதியில் பயன்பாட்டிற்கு இல்லாத கல்குவாரி ஒன்று உள்ளது. அதில் நீர் தேங்கி கல்வெட்டான்குழி என்று அழைக்கப்படும் இடத்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் பிணமாக மிதப்பதாக அம்பை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் சம்பந்தர் தெருவை சேர்ந்த நடராஜன் (வயது 75) தச்சு தொழிலாளி என்பதும், இவர் கால் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் எனவும் தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story