சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி


சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி
x

சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலியானார்.

திருவண்ணாமலை

தூசி

சைக்கிள் மீது சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலியானார்.

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமம் அனுமந்தபேட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70). கூலி தொழிலாளி. இவர் தினமும் சைக்கிளில் காஞ்சீபுரத்தில் வேலைக்கு சென்று திரும்பி வந4்தார். நேற்று முன்தினம் முத்துசாமி வேலை முடிந்ததும் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.

தூவசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துசாமி தலையில் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்த தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு மற்றும் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி முத்துசாமி இறந்து விட்டார். இது குறித்து அவரது மனைவி அம்புஜம் அளித்த புகாரின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story