சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 8 Jan 2023 9:23 PM IST (Updated: 9 Jan 2023 4:04 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55), விவசாயி கூலித்தொழிலாளி. அவரது நண்பர் பரமனந்தல் காமராஜர் நகரை சேர்ந்த ஏழுமலை. இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் செங்கத்தில் இருந்து கடலாடி வழியாக போளூர் செல்லும் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஆறுமுகம் ஓட்டினார்.

கலசபாக்கத்தை அடுத்த அருணகிரிமங்கலம் கிராமத்தின் சாலை ஓரத்தில் உள்ள ஓட்டல் சுவர் மீது திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயத்துடன் இருந்த ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story