மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
x

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தார்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழவண்ணம் கிராமத்தை சேர்ந்தவர் கேசவமூர்த்தி(வயது 62). கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டிற்கு செல்லும் மின் இணைப்பில் மரத்தின் இலைகள் சிக்கியிருந்தது.

இதைக்கண்ட கேசவமூர்த்தி, அந்த இலைகளை அகற்றிவிட முயற்சி செய்துள்ளார். அப்போது கேசவமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கேசவமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story