மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி


மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
x

குடிநீர் குழாய் அமைத்த போது மின்சாரம் பாய்ந்து ெதாழிலாளி பலியானார். மற்றொரு சம்பவத்தில் மாணவி இறந்தார்.

மதுரை

குடிநீர் குழாய் அமைத்த போது மின்சாரம் பாய்ந்து ெதாழிலாளி பலியானார். மற்றொரு சம்பவத்தில் மாணவி இறந்தார்.

தொழிலாளி பலி

திருவண்ணாமலை தண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகன் ராஜேந்திரன் (வயது 31). இவர் மதுரையில் நடைபெறும் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அய்யர்பங்களா பாரதிதாசன் தெருவில் வீடுகளில் குழாய் இணைப்பு கொடுத்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரத்தில் இயங்கும் டிரில்லிங் மிஷினை இயக்கி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் தூக்கி வீசப்பட்ட அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தல்லாகுளம் போலீசார் உயிரிழந்த ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இறந்தவரின் மனைவி தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தனியார் குழாய் கம்பெனி மற்றும் தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் மற்றும் அதன் ஒப்பந்ததாரர் செல்லமுத்து ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி சாவு

திருமங்கலம் அருகே கூடக்கோவில் போலீஸ் சரகம் சின்னஉலகாணி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகள் கார்த்திகை செல்வி (12). இவர் சின்ன உலகாணி அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் காளிமுத்து சின்ன உலகாணி கிராமத்தில் தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி உள்ளார். புதிதாக கட்டும் வீட்டில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் கார்த்திகை செல்வி மின்விசிறி போடுவதற்காக வயரை சொருகியுள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவி கார்த்திகை செல்வியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடற்கூறு ஆய்வகத்தில் வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story