மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x

மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்

விருதுநகர் அருகே எம் புளியங்குளத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 37). இவர் விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர் வேலையில் இருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி இவரது மனைவி சங்கரம்மாள் (32) கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Next Story