மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு


மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
x

விருதுநகரில் பிளக்ஸ் போர்டு மாட்டிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்


விருதுநகரில் பிளக்ஸ் போர்டு மாட்டிய தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் பாய்ந்தது

விருதுநகர் ஐ.டி.பி.டி. காலனியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 47). இந்நகர் காந்திபுரம் தெருவை சேர்ந்தவர் குமார் (36). இவர்கள் இருவரும் பிளக்ஸ் போர்டுகள் தயாரித்து கட்டிடங்கள் மற்றும் உயரமான அமைப்புகளில் கட்டும் பணியை செய்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை விருதுநகர் கச்சேரி ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது மாடியில் பிளக்ஸ் போர்டு கட்டும் பணியை மேற்கொண்டனர். அப்போது பிளக்ஸ் போர்டில் உள்ள இரும்பு சட்டம் அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது.

தொழிலாளி பலி

இதில் பிளக்ஸ் போர்டை கட்டிக் கொண்டிருந்த ஊழியர்கள் சுரேஷ்குமார், குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. அதில் சுரேஷ்குமார் 2-வது மாடி கட்டிடத்திலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் சுரேஷ் குமார் மற்றும் குமாரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சுரேஷ்குமார் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மின்சாரம் தாக்கி பலியான சுரேஷ்குமாருக்கு செல்வராணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story