மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு


மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி சாவு
x

அடுக்கம்பாறை அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த கட்டுபடி பகுதியை சேர்ந்தவர் கிளமன்ராஜா (வயது 19), வெல்டிங் தொழிலாளி. இவர் கணியம்பாடியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 10-ந் தேதி இரவு வேலை முடித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடுக்கம்பாறை ஓசூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயகாந்த் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கிளமன்ராஜாவின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கிளமன்ராஜா பரிதாபமாக உயர்ந்தார்.

இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story