மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி- உறவினர்கள் மறியல்


மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலி- உறவினர்கள் மறியல்
x

மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார். உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

மோட்டார்சைக்கிள் விபத்தில் தொழிலாளி பலியானார். உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஆம்பூரை அடுத்த உமராபாத் பள்ளித் தெரு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 42). இவர் அதே பகுதியில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஆம்பூர்- பேரணாம்பட்டு சாலையில் வந்த போது இலரது மோட்டார்சைக்கிளும் எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் மோதியதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் தூக்கி வீசவ்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அந்த வழியாக வந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் நாகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். உமராபாத் போலீசார் நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே நேற்று நாகராஜ் உடலுடன் குடும்பத்தினர் உமராபாத்-பேரணாம்பட்டு சாலையில் விபத்து ஏற்படுத்திய வாலிபரை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் உமராபாத் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.இச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story