கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி


கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி
x

வடமதுரை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டி நாடார் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 50). பனைமரம் ஏறும் தொழிலாளி. நேற்று இவர், ஆண்டிபட்டியில் உள்ள குழிப்பாறை குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் துணி துவைத்து குளித்து விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய குடும்பத்தினர், அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவரது மொபட் மற்றும் துணிகள் கரையில் இருந்தன. ஆனால் கனகராஜை காணவில்லை. இதனால் கனகராஜ் தண்ணீரில் மூழ்கி இருக்கலாம் என்று கருதி வடமதுரை போலீசார் மற்றும் வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாசம் தலைமையிலான தீயணைப்பு படையினர், தண்ணீரில் இறங்கி தேடினர். 5 மணி நேர தேடுதலுக்கு பிறகு கனகராஜ் பிணமாக மீட்கப்பட்டார். குட்டையில் குளித்த அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கனகராஜிக்கு உமாமகேஸ்வரி என்ற மனைவியும், கோகுல்நாத் (14) என்ற மகனும் மதுமிதா (12) என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story