ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு


ஆற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 19 Jun 2023 2:13 AM IST (Updated: 19 Jun 2023 1:03 PM IST)
t-max-icont-min-icon

சுவாமிமலை அருகே மீன்பிடிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

சுவாமிமலை அருகே மீன்பிடிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொழிலாளி

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள மருத்துவக்குடி மேல தெருவை சேர்ந்தவர் ரவி (வயது50). தொழிலாளி.

இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள பலவாற்றில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது ரவி எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி மாயமானார்.

ஆற்றில் பிணமாக மிதந்தார்

இந்த நிலையில் நேற்று காலை சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூர் கிராமத்தில் ஆற்றில் ரவி பிணமாக மிதந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, இதுகுறித்து சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

மேலும் இதுதொடர்பான சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story