ஊருணியில் மூழ்கி தொழிலாளி சாவு


ஊருணியில் மூழ்கி தொழிலாளி சாவு
x

திருப்புல்லாணி அருகே ஊருணியில் மூழ்கி தொழிலாளி இறந்தார்.

ராமநாதபுரம்


திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு பக்கம் உள்ள கட்டையன்வலசை பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 55). தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள மூலத்தரவை ஊருணி பகுதியில் இறந்த நிலையில் மிதந்து கிடந்தார். அவர் குளிக்க சென்றபோது மூழ்கி மூச்சுதிணறி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் மோகன்ராஜ் (28) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story