10 அடி ஆழ தொட்டியில் மயங்கி விழுந்த தொழிலாளி


10 அடி ஆழ தொட்டியில் மயங்கி விழுந்த தொழிலாளி
x

பெயிண்டிங் பணியின் போது 10 அடி ஆழ தொட்டியில் மயங்கி விழுந்த தொழிலாளி

கன்னியாகுமரி

நாகா்கோவில்,

நாகர்கோவில் செட்டிகுளத்தில் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 10 அடி ஆழ தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் கோட்டாா் வாகையடி தெருவை சேர்ந்த தொழிலாளி செல்வம் (வயது 64) என்பவர் நேற்று ஈடுபட்டார். அப்போது பெயிண்ட் வாசம் தாங்க முடியாமல் செல்வம் திடீரென மயங்கி தொட்டியில் விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மாவட்ட தீயணைப்பு அதிகாரி தென்னரசு உத்தரவின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீர் தொட்டியில் விழுந்த செல்வத்தை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அந்த தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

-----


Next Story