தொழிலாளி தவறி விழுந்து சாவு


தொழிலாளி தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 6 Jan 2023 1:07 AM IST (Updated: 6 Jan 2023 5:05 PM IST)
t-max-icont-min-icon

கல்லிடைக்குறிச்சி அருகே தொழிலாளி தவறி விழுந்து பலியானார்.

திருநெல்வேலி

அம்பை:

கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன் சிங்கம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 35). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வைராவிகுளத்தில் ஒரு வீட்டில் வேலை பார்க்கும் போது தவறி கீழே விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story