தொழிலாளி தவறி விழுந்து சாவு
சாத்தான்குளம் அருகே தொழிலாளி தவறி விழுந்து இறந்தார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே கருங்கடல் நடுத்தெருவை சேர்ந்தவர் துரைராஜ் என்பவருடைய மகன் சாம்ராஜ் (வயது 27). ஐ.டி.ஐ. முடித்துள்ள இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 23-ந் தேதி கருவேலம்பாடு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சாம்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் ஜேம்ஸ் மார்ட்டின், சிங் ஆகியோர் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூரையில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சாம்ராஜ் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று சாம்ராஜ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தாய் சித்திரைக்கனி (57) என்பவர் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். ஏட்டு மரியராஜ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் முத்து விசாரணை நடத்தி வருகிறார்.