சரக்கு ரெயில் மீது ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயம்


சரக்கு ரெயில் மீது ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயம்
x

ஜோலார்பேட்டையில் சரக்கு ரெயில் மீது ஏறிய தொழிலாளி மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.

திருப்பத்தூர்

தர்மபுரி மாவட்டம் மாடஹல்லி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 40). குடும்ப தகராறு காரணமாக கடந்த 7 வருடங்களாக கணவன்- மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். லட்சுமணன் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சுய நினைவு மாறி மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது.

கடந்த 3-ந் தேதி பவுர்ணமி என்பதால் லட்சுமணனுக்கு சுயநினைவு மாறி ஈரோட்டில் இருந்து ஏதோ ஒரு ரெயில் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது ஏறி உள்ளார். அப்போது மேலே இருந்த உயர் அழுத்த மின் கம்பி லட்சுமணன் மீது பட்டு மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

இரவு நேரம் என்பதால் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. பின்னர் 4-ந்தேதி காலை தண்டவாளத்தின் அருகில் மயங்கிய நிலையில் கிடந்தவரை ரெயில்வே போலீசார் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story