காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்


காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம்
x

மசினகுடி அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

நீலகிரி

கூடலூர்

மசினகுடி அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

காட்டெருமை தாக்கியது

நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்கரா வனப்பகுதியில் காட்டுயானைகள், கரடிகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. சில சமயங்களில் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பொதும்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரோந்து சென்ற வன ஊழியர்களை கரடி ஒன்று தாக்கியது.

இந்த நிலையில் மசினகுடி அருகே நார்தன் ஹே எஸ்டேட் பகுதியை சேர்ந்த ரபீக்சேட் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் ஈரன் மகன் குருஜன் (வயது 57) என்பவர் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று மதியம் 12.30 மணிக்கு உணவு சாப்பிட தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த காட்டெருமை திடீரென குருஜனை தாக்கியது.

தீவிர சிகிச்சை

இதை சற்றும் எதிர்பாராத அவர் தப்பி ஓட முயன்றும் முடியவில்லை. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனிடையே சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்து காட்டெருமையை விரட்டியடித்தனர். தொடர்ந்து குருஜனை மீட்டு மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி தலைமை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story