பிணை ஆணைைய மீறிய தொழிலாளி சிறையில் அடைப்பு


பிணை ஆணைைய மீறிய தொழிலாளி சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடத்தில் பிணை ஆணைைய மீறிய தொழிலாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் அருகே உள்ள வடக்கு பாறைப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 50). கூலித் தொழிலாளியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவரிடம் இருந்து 1 வருடத்திற்கு பிணை ஆணை பெறப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து அவர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிந்து கனகராஜை கைது செய்தனர். பின்னர் அவர், தாசில்தார் பரமசிவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதுதொடா்பாக விசாரணை நடத்திய அவர், பிணை ஆணையை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட கனகராஜை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story