கொங்கணாபுரம் அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி


கொங்கணாபுரம் அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
x

கொங்கணாபுரம் அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியானார்.

சேலம்

எடப்பாடி:

கொங்கணாபுரத்தை அடுத்த ராக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் பிரகாஷ் (வயது 36). தொழிலாளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பிரகாஷ் வீட்டில் இருந்தார். அப்போது வீட்டில் சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மாடியில் இருந்த பிரகாஷ் சிலிண்டரை அணைப்பதற்காக இரும்பு படிக்கட்டில் ஓடி வந்தாராம். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக படிக்கட்டில இருந்து தவறி விழுந்தார். இதில் பின்பக்க மண்டையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பிரகாசை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story