கட்டையால் அடித்து தொழிலாளி கொலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கட்டையால் அடித்து தொழிலாளி கொலை:  ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேவாரத்தில் கட்டையால் அடித்து விவசாயியை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தேனி

தேவாரம் பஸ் நிலைய பகுதியை சேர்ந்தவர் யோக ஈஸ்வரன் (வயது 35). கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த மணிகண்டன் (50) என்பருக்கும் நில பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் மணிகண்டன், இவரது மனைவி சுந்தர லட்சுமி (47) மகன் ராமகிருஷ்ணன் (25) ஆகியோர் சேர்ந்து ஈஸ்வரனை கட்டையால் அடித்து கொலை செய்தனர்.

இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்பட 3 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்பேரில் இந்த உத்தரவை தேவாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.


Next Story