மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

நெல்லையை சேர்ந்த தொழிலாளி, ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி பலியானார்.

தென்காசி

ஆலங்குளம்:

நெல்லையை சேர்ந்த தொழிலாளி, ஆலங்குளம் அருகே மின்சாரம் தாக்கி பலியானார்.

பேக்கரி கடை தொழிலாளி

நெல்லை முருகன்குறிச்சி வெள்ளை கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்மணி மகன் ரமேஷ் (வயது 37). இவர் மனைவி மற்றும் 2 மகள்களுடன் ஆலங்குளம் அருகே உள்ள துத்திக்குளம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

ஆலங்குளம் அருகே ரெட்டியார்பட்டியில் பேக்கரி ஒன்றில் ரமேஷ் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

மின்சாரம் தாக்கி பலி

இந்தநிலையில் சடையப்பபுரம் தெருவில் உள்ள, பேக்கரிக்கு சொந்தமான குடோனில் ரமேஷ் ரஸ்க் வெட்டுவதற்காக சென்றார். அப்போது ரஸ்க் வெட்டும் கட்டிங் எந்திரத்தின் வயரை எடுத்து பிளக் போர்டில் சொருகியுள்ளார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த ரமேசின் உடலை பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story