மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்

மதுரை


மதுரை பொன்மேனி மெயின் ரோடு மீனாட்சி நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 42). கட்டிட தொழிலாளியான இவர் மாடக்குளம் மெயின்ரோட்டில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை பார்க்கும் போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்து மின்வயரை தொட்டதாக கூறப்படுகிறது. அதில் சக்திவேல் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story