விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x

நெல்லை அருகே விபத்தில் தொழிலாளி இறந்தார்.

திருநெல்வேலி

நெல்லை:

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த பிராஞ்சேரியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 53). கட்டிட தொழிலாளி. இவருடைய மகன் சுபாஷ் ராஜா (19). பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று இரவு கயத்தாறுக்கு சென்றிருந்த சுபாஷ் ராஜாவை அழைத்து வருவதற்கு வெங்கட்ராமன் மொபட்டில் சென்றார். 2 பேரும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, சன்னதுபுதுக்குடி பகுதியில் எதிரே வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த வெங்கட்ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். சுபாஷ் ராஜா பலத்த காயம் அடைந்தார். அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story