தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி பலி


தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி பலி
x

பெரியகுளம் அருகே தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி பலியானார்.

தேனி

தேனி அருகே உள்ள அன்னஞ்சியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் உறவினரிடம் வேலை கேட்பதற்காக பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தேனீக்கள் கூட்டமாக வந்து பெருமாளை கொட்டியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story