மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
x

புன்னம் சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கார் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

நொய்யல்,

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே குப்புரெட்டிப்பட்டி ஓமாந்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52), கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் புன்னம்சத்திரம் அருகே அதியமான்கோட்டையில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.கரூர்-ஈரோடு ரோட்டில் புன்னம்சத்திரம் அருகே தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே துக்காச்சி காட்டம்பட்டியை சேர்ந்தராஜேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக முருகேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி முருகேசன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து முருகேசனின் மகன் சுரேஷ்குமார் (21) என்பவர் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன், விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் ராஜேஷ் மீது வழக்குப்பதிந்து, அந்த காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story