சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி
சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே ராப்பூசல் செவக்களத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 55). தொழிலாளி. இவர், நேற்று இரவு இலுப்பூர் நவம்பட்டி பஸ் நிலையம் அருகே நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது புதுக்கோட்டையில் இருந்து சரக்குகளை ஏற்றிகொண்டு இலுப்பூர் சென்ற சரக்கு வேன் சின்னத்துரை மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சரக்கு வேன் டிரைவர் புதுக்கோட்டை அடப்பன்வயல் பகுதியை சேர்ந்த அஸ்வின் (23) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story