அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
முத்துப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
முத்துப்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.
தொழிலாளி
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை சுந்தரம் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது56). தொழிலாளி. இவர் தினமும் அதிகாலை வீட்டில் இருந்து கிழக்கு கடற்கரை சாலைவழியாக நடந்து சென்று செம்படவன்காடு ரவுண்டா அருகே உள்ள டீக்கடையில் டீ குடிப்பது வழக்கம்.
அதன்படி நேற்று அதிகாலை 4 மணி மணி அளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு வழக்கமான கடையில் டீக்குடித்துவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
செம்படவன்காடு கோவில் ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த முததுப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் தொழிலாளி பலியானது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.