அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி


அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
x

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 40), கூலி தொழிலாளி. இந்தநிலையில் சொந்த வேலையாக அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு மோட்டார்சைக்கிளில் திரும்ப சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்திபட்டி பெத்தம்மாள் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி குமரேசன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Related Tags :
Next Story