மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.
விராலிமலை தாலுகா தேங்காய்திண்ணிபட்டி வளர்பண்ணை தெருவை சேர்ந்தவர் நல்லுச்சாமி (வயது 58). கூலி தொழிலாளி. இவர் நேற்று சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டு தேங்காய்திண்ணிப்பட்டி கருப்பர்கோவில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நல்லுச்சாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த நல்லுச்சாமியை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்களால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நல்லுச்சாமி இன்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் மணப்பாறை வெள்ளகல் வீராசாமி தெருவை சேர்ந்த நடராஜமூர்த்தி (47) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.