மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
திட்டச்சேரியில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.
திட்டச்சேரி:
திட்டச்சேரி ப. கொந்தகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது53) தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் இரவு திருமலைராஜன் பட்டினத்தில் இருந்து தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது எதிரே வந்த மருங்கூர் நெய்குப்பை காலனி தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் ராம்குமார் (22) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராம்குமார் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.