மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 11 Nov 2022 1:00 AM IST (Updated: 11 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

சேலம்

அயோத்தியாப்பட்டணம்:-

அயோத்தியாப்பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அரூர் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story