அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே வங்கநகர் ஊராட்சியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 53). கூலித்தொழிலாளி. இவரது மனைவி இந்திரா. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். நேற்றுமுன்தினம் இவர் திருத்துறைப்பூண்டி திருவாரூர் சாலையில் வேலைக்காக வந்துவிட்டு, பின்னர் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக பழனிசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பழனிசாமி மகன் யோகானந்தம் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிசாமி விசாரணை நடத்தி வருகின்றனர்.