வேன் மோதி தொழிலாளி பலி


வேன் மோதி தொழிலாளி பலி
x

ஆம்பூர் அருகே வேன் மோதி தொழிலாளி பலியானார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே வேன் மோதி தொழிலாளி பலியானார்.

ஆம்பூர் அழகாபுரி பகுதியை சேர்ந்த சம்பத் மகன் வசந்த் (வயது 23). இவர் கூலி தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஆம்பூரில் இருந்து விண்ணமங்கலத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஒரு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது கோழிகளை ஏற்றி வந்த வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட வசந்த் வேனின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வசந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story