கால் தவறி கீழே விழுந்த தொழிலாளி சாவு


கால் தவறி கீழே விழுந்த தொழிலாளி சாவு
x

தூசி அருகே கால் தவறி கீழே விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

தூசி

செய்யாறு தாலுகா தூசி அருகே உக்கல் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55), கூலி தொழிலாளி. இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பேபி, கலையரசி ஆகிய 2 மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர்

இந்த நிலையில் பெருமாள் கடந்த 17-ந் தேதி இரவு வீட்டின் கழிவறைக்கு சென்றார். அப்போது கால் தவறி கீேழ விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெருமாளின் தம்பி அன்பழகன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story