ரத்த காயத்துடன் மயங்கி கிடந்த தொழிலாளி


ரத்த காயத்துடன் மயங்கி கிடந்த தொழிலாளி
x

தஞ்சையில் ரத்தக் காயத்துடன் தொழிலாளி மயங்கி கிடந்தார்

தஞ்சாவூர்
தஞ்சை கீழவாசல், சரபோஜி மார்கெட்டில் இயங்கி வந்த 350 கடைகளை முழுவதுமாக இடித்து, தற்போது ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் 308 கடை கட்டப்பட்டுள்ளன. இந்தக் கடைகள் ஏலம் விடப்பட்டாலும் எல்லா கடைகளும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் சரபோஜி மார்க்கெட் வளாகத்தில் நேற்று இரவு தொழிலாளி ஒருவர் தலை, முகத்தில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தார்.

இதைப் பார்த்த சிலர் தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், ஏட்டு மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினா். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த நபரை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சரபோஜி மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு இடையே நேற்று மாலை தகராறு ஏற்பட்டதாகவும், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயம் அடைந்த நபரின் பெயர் கார்த்தி என்பதும், அவர் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.அவருக்கு தலையில் எப்படி காயம் ஏற்பட்டது என உடனடியாக தெரியவில்லை. யாராவது முன்விரோதம் காரணமாக தாக்கினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






Next Story