தொழிலாளி மர்மசாவு; போலீசார் விசாரணை
தொழிலாளி மர்மசாவு; போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம் அருகே செரியலூர் ஜெமின் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 55). கூலித்தொழிலாளி. இன்று அதே ஊரில் நடந்த ஒரு துக்க நிகழ்விற்கு சென்றவர் மதியம் தனது மாமா வீட்டிற்கு சென்று அங்கிருந்து அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு சென்றுள்ளார். மாலையில் சேகர் ஒரு தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் பரவியது. சம்பவ இடத்திற்கு உறவினர்களும், கீரமங்கலம் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சென்று பார்த்த போது வாயில் நுரை தள்ளிய நிலையில் சேகர் இறந்து கிடந்தார். மேலும், சேகரின் அருகே விஷம் கலந்த தண்ணீர் பாட்டில் மற்றும் சாதம், பிரிக்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட் கிடந்துள்ளது. தொடர்ந்து போலீசார் சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விஷம் கலந்த தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். சேகர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறிவரும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.