ஓமலூர் அருகே மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய தொழிலாளி- போலீசார் விசாரணை


ஓமலூர் அருகே மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய தொழிலாளி- போலீசார் விசாரணை
x

ஓமலூர் அருகே மனைவி மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்

கருப்பூர்:

கூலித்தொழிலாளி

ஓமலூர் அருகே கருப்பனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா (37). சம்பவத்தன்று நித்யா வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது ராகவன் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவர், மனைவியிடம் சென்று என்ன குழம்பு வைத்தாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் தக்காளி சாம்பார் என பதில் அளித்துள்ளார், மேலும் குழம்பு வைக்க தேவையான காய்கறிகளை வாங்கி தருவதற்கு உன்னால் முடியவில்லை என கணவர் ராகவனிடம், நித்யா தகராறில் ஈடுபட்டுள்ளார்.

சாம்பாரை ஊற்றினார்

இதனால் ஆத்திரம் அடைந்த ராகவன், தனது மனைவி நித்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த சாம்பாரை எடுத்து அவர் மீது ஊற்றினார். இதன் காரணமாக சூடுதாங்க முடியாமல் நித்யா அலறி துடித்த படியே வீட்டை விட்டு வெளியே ஓடினார். மேலும் அவரது உடம்பில் கொப்பளங்கள் ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஓமலூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நித்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் ஓமலூர் போலீசார் ராகவன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story