கடையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
கடையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி பலியானார்
தென்காசி
கடையம்:
கீழக்கடையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50). இவர் ஆலங்குளத்தில் ஒரு ரைஸ் மில்லில் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 20-ந்தேதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு தனது மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். தெற்குமடத்தூர் குடிநீர் தொட்டி அருகே அவர் வந்து கொண்டிருந்தார். அப்போது வி.கே.புரம் அனவன்குடியிருப்பை சேர்ந்த மணிமுத்து மகன் மாரியப்பன் (45), மனைவி கனியம்மாள் ஆகிய இருவரும் கீழகுத்தப்பாஞ்சான் கோவில் கொடை விழாவிற்காக மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். திடீரென 2 மோட்டார்சைக்கிள்களும் மோதிக்கொண்டன. இதில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மாரியப்பன் மனைவி கனியம்மாளுக்கு கால் முறிந்தது. இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story