மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி
x

சாமல்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் தொழிலாளி இறந்தார்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

சாமல்பட்டி அருகே கல்குமாரம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது32). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி காலை சாமல்பட்டி- குன்னத்தூர் சாலையில் கல்குமாரம்பட்டி அருகில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் மாரியப்பன் ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் இறந்தார். இந்த விபத்து குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story