மொபட் மோதி தொழிலாளி படுகாயம்


மொபட் மோதி தொழிலாளி படுகாயம்
x

மொபட் மோதி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

கரூர்

கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 55). தொழிலாளியான இவர், திருக்காம்புலியூருக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு வருவதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது குளித்தலை மீன்கார தெருவை சேர்ந்த நந்தகுமார் (24) என்பவர் ஓட்டி வந்த மொபட் எதிர்பாராத விதமாக சின்னப்பன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சின்னப்பன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சின்னப்பனின் உறவினர் ஹரிபாஸ்கரன் கொடுத்த புகாரின்பேரில், மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story