மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் தொழிலாளி படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் தொழிலாளி படுகாயம்
x

ஆத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மேல ஆசாரி பள்ளத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் மகன் அந்தோணி ராஜன் (வயது 46). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி.

நேற்று முன்தினம் மாலையில் ஆத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் ெசன்றார். பழைய காயலை அடுத்துள்ள சீர்கோணியம் வளாகத்திற்கு அருகே ெசன்றபோது, எதிரே தூத்துக்குடி மில்லில் இருந்து வந்த வேன் அந்தோணி ராஜன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்தோணி ராஜன் பலத்த காயமடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வேன் டிரைவரான மஞ்சள்நீர்காயலை சேர்ந்த பக்கிள் மகன் லட்சுமணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story