தூத்துக்குடியில் தொழிலாளிக்கு கத்திக்குத்து
தூத்துக்குடியில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சகாயராஜ். இவருடைய மகன் ஆரோக்கியராஜ் (வயது 27). தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கிருஷ்ணராஜபுரம் சந்திப்பு பகுதியில் குடி போதையில் கையில் கத்தியை வைத்துக்கொண்டு தகராறு செய்தாராம். இதனை தூத்துக்குடி நாட்டுக்கோட்டை செட்டி தெருவை சேர்ந்த எமர்சன் மகன் விமல் குமார் (34) என்ற தொழிலாளி கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஆரோக்கியராஜ், விமல் குமாரிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆரோக்கியராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story