தொழிலாளி தற்கொலை
கடையநல்லூர் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூர் கடகாலீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த முருகையா மகன் மகேஸ்வரன் (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த மகேஸ்வரன் தனது வீட்டின் அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story