கொல்லங்கோடு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


கொல்லங்கோடு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

கொல்லங்கோடு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கொல்லங்கோடு அருகே காக்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 45), தொழிலாளி. இவருடைய மனைவி விஜிலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது இவர் குடும்பத்தினருடன் சிலுவைபுரத்தில் தங்கி வந்தார். இந்தநிலையில் அவர் தனியார் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியதாக தெரிகிறது. மேலும் அந்த கடனை அடைக்க சிரமப்பட்டுள்ளார். இதனால் வாழ பிடிக்கவில்லை என அவர் கூறிவந்துள்ளார்.

11-ந் தேதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. பின்னர் இரவில் அவர் மனைவியுடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் திடீரென தூக்கத்தில் இருந்து கண் விழித்த ஸ்ரீகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் விஜிலா எழுந்து பார்த்த போது கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக விஜிலா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story