தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள நாரணாபுரத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி மருது (வயது 37). இவருக்கு லட்சுமிபிரியா என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக மருதுவும், லட்சுமி பிரியாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மருது நாரணாபுரத்தில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருது தனது குழந்தைகளை பார்க்க சென்ற போது அங்கு குழந்தைகள் மருதுவை பார்க்க பிடிக்காமல் வீட்டிற்குள் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மருது தனது வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மருதுவின் தாய் ஆவுடச்சி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story