சிதம்பரம் அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை


சிதம்பரம் அருகே    மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை
x

சிதம்பரம் அருகே மது குடித்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்


அண்ணாமலைநகர்,

சிதம்பரம் அருகே உள்ள சித்தலாப்பாடி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜன்(வயது 45). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதை அவரது மனைவி ஜெயமாலினி(42) கண்டித்தார். இதில் மனமுடைந்த சுந்தர்ராஜன், வடுகத்திருமேடு சாலையில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story