தொழிலாளி தற்கொலை


தொழிலாளி தற்கொலை
x

வடமதுரை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள தெற்கு மோளப்பாடியூரை சேர்ந்தவர் பீட்டர்ராஜா (வயது 38). கட்டிட தொழிலாளி. அவருடைய மனைவி அந்தோணிமேரி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் அந்தோணி மேரி வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பீட்டர்ராஜா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்தும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த பீட்டர்ராஜா நேற்று முன்தினம் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பீட்டர்ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story