தொழிலாளி தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பாப்பிரெட்டிப்பட்டி:-
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கூலி தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே விஜயநகரத்தை சேர்ந்தவர் தேவன். இவருடைய மகன் செல்வராஜ் (வயது 30), கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் சரிவர எந்த வேலைக்கும் செல்லாமல் கடன் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். அதிக கடனானதால் செல்வராஜ் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
தற்கொலை
நேற்று முன்தினம் மதியம் அவர், பருத்தி செடிக்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மனைவி அஞ்சலா மேரி இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து செல்வராஜ் மனைவி கதறி அழுதார். இதுகுறித்த புகாரின் பேரில் பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.