தொழிலாளி தற்கொலை
ஆண்டிப்பட்டியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). கூலித்ெதாழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (27). இவரது சொந்த ஊரான சிவகங்கையில் கணவன்-மனைவி வசித்து வந்தனர். கடந்த 11-ந்தேதி இருவருக்கும் வீட்டில் தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்டு கண்ணன் ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள வீட்டுக்கு வந்து தங்கினார். அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக அவருடைய வீடு பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் பார்த்தனர். அங்கு வேட்டியால் தூக்குப்போட்டு கண்ணன் பிணமாக தொங்கினார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.