தொழிலாளி தற்கொலை
மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
நிலக்கோட்டையை சேர்ந்தவா் பாண்டிகுமார் (வயது 37). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி பொன்மலர். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு, தேனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு பொன்மலர் சென்று விட்டார்.
மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் பாண்டிகுமார் விரக்தி அடைந்தார். இதனால் மனம் உடைந்த அவர், கடந்த 9-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பாண்டிகுமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.